சவரன் ரூ.64,160-க்கும் விற்பனை சர்ரென குறைந்த விலை...

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், பெரும்பாலும் விலை அதிகரித்தபடியே உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்படியான நிலை நீடித்து வரும் நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,000-த்தை தாண்டியது.
மீண்டும் தங்கம் விலை 1 சவரனுக்கு ரூ.60,000 குறைவதற்கு வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வருடத்துக்குள் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000 வரை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அதன்படி, நேற்று (மார்ச் 10-ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று (மார்ச் 11-ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : சவரன் ரூ.64,160-க்கும் விற்பனை சர்ரென குறைந்த விலை...