பெண் காவலரை அரிவாளால் வெட்டிய கணவர்

by Staff / 17-06-2024 03:56:27pm
பெண் காவலரை அரிவாளால் வெட்டிய கணவர்

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவரது கணவர் மேகநாதன் என்பவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் டில்லி ராணி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அவரது கணவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கடந்த 6 மாத காலமாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தப்பியோடிய மேகநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via