பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட  சிறுவன் சடலமாக மீட்பு.

by Editor / 18-05-2024 12:10:12am
பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட  சிறுவன் சடலமாக மீட்பு.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வருகின்றது இந்த நிலையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலை உள்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் பழைய குற்றாலம் அருவி ஐந்தறி உள்ளிட்ட இரண்டு அருவிகளிலும் நீர் வைத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த நிலையில் திருநெல்வேலி சார்ந்த குமார் என்பவரது குடும்பத்தினர் பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீர்வரத்து அதிகரித்து கொண்ட தொடங்கியது இதன் தொடர்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் நீர்வரத்து அதிகரித்து தொடர்ந்து அங்கிருந்து தப்பி வருகின்ற சமயம் அஸ்வின் என்கின்ற 16 வயது சிறுவன் மட்டும் வெள்ளநீரில் சிக்கிக்கொண்டார். அவர் மட்டும் வெல்ல நீரில் அடித்து செல்லப்பட்டார்.அவரை தேடும்பணியில்  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஈடுபட்டனர் மேலும் காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் முகாம்மிட்டனர் தொடர்ந்து 3 மணிநேரம் தேடுதலுக்குபின்னர் சிறுவனின் உடலை பழையகுற்றாலம் அருவியிலிருந்து 300 அடிபள்ளத்தில் இழுத்து  செல்லப்பட்டு பாறைகளின் இடையில் கிடந்து  ஆயிரப்பேரியை சேர்ந்த இளைஞர்கள் மீட்டனர்.இதனைத்தொடர்ந்து சிறுவனைன் உடல் உடல்கூறுபரிசோதனைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

 

Tags : பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட  சிறுவன் சடலமாக மீட்பு.

Share via