மாந்திரீக பூஜை செய்தவர் எரித்துக் கொலை

by Editor / 22-03-2025 03:57:16pm
மாந்திரீக பூஜை செய்தவர் எரித்துக் கொலை

ஆந்திரா மாநிலத்தில் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாந்திரீக பூஜை செய்த முதியவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொம்புரிகுடா மலை கிராமத்தை சேர்ந்த அடாரி தொம்புரு (60) செய்யும் மாந்திரீகமே தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க காரணம் என கிராம மக்கள் சந்தேகித்துள்ளனர். இந்நிலையில், அவரை கிராம மக்கள் கற்கள், கட்டைகளால் தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளனர். இதையடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via