தந்தையின் அறிவுரையின்படி அடுத்த கபில்தேவ் அஸ்வின்

by Admin / 09-03-2022 11:34:22am
தந்தையின் அறிவுரையின்படி அடுத்த கபில்தேவ் அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான அஸ்வின்.
 
28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். 

கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனெனில் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விருப்பம்.

1994-ம் ஆண்டில், பேட்டிங் தான் எனது பிரதான ஆசையாக இருந்தது. அச்சமயம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன். காலப்போக்கில் நான் ஆப்-ஸ்பின்னராக மாறிய பிறகு, இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி விட்டேன். 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் கால்பதிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த சாதனையை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்  என்றார்அடுத்த கபில்தேவாக உருவெடுக்க சிறுவயதில் விரும்பினேன்.

சமீபத்தில் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின், ‘உலக கிரிக்கெட் அரங்கில் சுழற்பந்து வீச்சை முன்னெடுத்து சென்றவர் வார்னே தான். கிரிக்கெட் உலகில் சுழற்பந்து வீச்சிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையை கொண்டு வந்தவர். 

மைக்கேட்டிங்குக்கு அவர் வீசிய பந்து குறித்து எல்லோரும் பேசுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை 2005-ம் ஆண்டில் ஆஷஸ் தொடரில் ஆன்ட்ரூ ஸ்டிராசுக்கு அவர் வீசிய பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. 

அந்த தொடரில் கிட்டத்தட்ட தனிநபராக அணியை மீட்டெடுக்க போராடினார். பழகுவதற்கு இனிமையான ஜாலியான ஒரு மனிதர் வார்னே’ என்றார்..அஸ்வின் 500 விக்கெட் எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை  என  கபில்தேவ்  கூறினார் .

 

Tags :

Share via