தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி.. அண்ணாமலைக்கு உத்தரவு

by Staff / 21-01-2024 01:52:44pm
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி.. அண்ணாமலைக்கு உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஒரு தொகுதிக்கு 3 பேரை தேர்வு செய்து இந்த மாத இறுதிக்குள் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரித்து அனுப்ப பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய தமிழக பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், இந்த முறை பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைகிறது. இதில் குறிப்பாக புதிய தமிழகம், ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories