மாணவி தற்கொலை- ஐஐடியில் தொடரும் பரிதாபங்கள்

by Staff / 21-01-2024 01:46:34pm
மாணவி தற்கொலை- ஐஐடியில் தொடரும் பரிதாபங்கள்

ஐஐடி கான்பூரில் பிஎச்டி படித்து வந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா. இவர் கடந்த 10 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஐடி கான்பூரில் கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது தற்கொலையாகும். தற்கொலைக்கு முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும். பெற்றோர்கள் தொடர்ந்து பிரியங்காவை தொலைபேசியில் அழைத்தும் பதில் அளிக்காத நிலையில், கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். அறையை சோதித்துப் பார்த்ததில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு, மின்விசிறியில் ஆன்லைனில் வாங்கிய கயிறு மூலம் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories