போலி நகைகளை கொடுத்து ரூ. 7. 25 லட்சம் மோசடி .

by Editor / 03-02-2023 07:43:45am
போலி நகைகளை கொடுத்து ரூ. 7. 25 லட்சம் மோசடி .

நெல்லை மாவட்டம், மூலக்கரைபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கண்ணன் (27), இவர் அப்பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துராமலிங்கம் என்ற போஸ், அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூவுடையார் ஆகிய 3பேரும் வல்லநாட்டில் உள்ள வங்கியில் அடமானம் வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று கூறி ரூ. 4லட்சம் வாங்கினார்களாம்.  

பின்னர் வங்கியில் இருந்து நகையை திருப்பியதாக கூறி, அவரிடம் 96 கிராம் எடையுள்ள 12 வளையல்களை கொடுத்துவிட்டு சென்றனர். அந்த நகைகளை கண்ணன்  ஆய்வு செய்தபோது அது போலி என்பது தெரியவந்தது. இதுபோல், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த சுப்பாராயுடு என்பவரிடம் மேற்கண்ட 3பேரும் போலி நகைகளை கொடுத்து ரூ. 3. 25லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிவு செய்து போலிநகைகளை கொடுத்து மோசடியில் ஈடுப்பட்டடு தலைமறைவாகி  உள்ள 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via