ஆரஞ்சுத் தோல் துவையல்

by Staff / 25-03-2022 05:33:41pm
ஆரஞ்சுத் தோல் துவையல்

ஆரஞ்சு தோலில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி காணப்படுகிறது. இதைத் தவிர இன்னும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ப்ரோ விட்டமின் ஏ, தயமின், விட்டமின் பி6 மற்றும் கால்சியம் போன்றவை காணப்படுகிறது.

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு,
 இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை போட்டு நன்கு வதக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.
வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

இப்போது சூப்பரான ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி.

 

Tags :

Share via

More stories