துக்ளக் குருமூர்த்திக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

by Editor / 30-07-2021 10:31:59am
துக்ளக் குருமூர்த்திக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

தமிழகத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் கண்ட கண்ட இடங்களில் அரசு தொல்பொருள் ஆய்வை முடுக்கி விட்டுள்ளதாக துக்ளக் செய்தி இதழில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பத்திரிகைக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அவரது ட்விட்டரில், பத்திரிகையாளர் குருமூர்த்தி இந்த கட்டுரையின் பின்னணி என்ன? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி நேரத்தை வீணடிப்பதாக கூறுகிறீர். இதனால் சாதாரண மனிதனுக்கு எந்த பயனும் இல்லை என சொல்கிறீர்கள் என்றால் ராமர் கோயில் கட்டுவதாலும் குஜராத்தின் ஒற்றுமை சிலையாலும் இந்தியாவின் பிரச்சினை தீருமா? என கேள்வி எழுப்பியுள்ளளார்.

 

Tags :

Share via

More stories

Logo