14 கலைப்பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவிலிருந்து திருடி விற்கப்பட்ட அல்லது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் ரூ. 22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் (என்ஜிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் 13 கலைப்பொருள்கள் சிலைக் கடத்தல் குற்றவாளி சுபாஷ் கபூரிடமிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியதாகும். ஒன்று மட்டும் நியூயாா்க்கைச் சோந்த கலைப்பொருள் முகவா் வில்லியம் உல்ஃப் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளது.
Tags :