கடன் தொல்லையால் வாடகைக்கு கார் ஓட்டியவர் தற்கொலை

சேலம் சூரமங்கலம் பெரும்மாம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (40) இவர் சொந்தமாக கார்கள் வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையையும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேரம அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :