மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு: வானதி சீனிவாசன் இரங்கல்.

by Staff / 15-11-2023 03:05:15pm
மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு: வானதி சீனிவாசன் இரங்கல்.


கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் திரு. என். சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகவும் வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tags :

Share via