கந்த சஷ்டி திருவிழாவில் முருகனை தரிசனம் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம்..?

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.இந்த ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் கோவில் முன்புள்ள கடற்கரையில் 7ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய இந்த கந்தசஷ்டி திருவிழாவில் கோவிலில் ஆறு நாட்கள் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பார்கள்.கோவிலில் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி அமலில் இருந்து வருகிறது.எனவே கடந்த ஆண்டைப் போலவே கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரைவு தரிசனத்திற்காக ஆயிரம் ரூபாய் சிறப்பு கட்டண பெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வருகின்ற 3 ஆம் தேதிக்குள் கோவில் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
Tags : கந்த சஷ்டி திருவிழாவில் முருகனை தரிசனம் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம்..?