நிர்வாணமாக்கிய ஆசிரியர்.. அவமானத்தால் தீக்குளித்த மாணவி

by Staff / 15-10-2022 03:15:56pm
நிர்வாணமாக்கிய ஆசிரியர்.. அவமானத்தால் தீக்குளித்த மாணவி

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் அவமானத்தால் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவியை ஆசிரியர் சந்திரதாஸ் என்பவர் பரிசோதித்துள்ளார். தொடர்ந்து மாணவி தேர்வில் காப்பி அடிப்பதற்காக தனது சீருடைக்குள் பிட் பேப்பரை மறைத்து வைத்திருந்ததாக ஆசிரியர் சந்தேகித்துள்ளார். மாணவி இல்லை என்று கூறியும் கேட்காத ஆசிரியர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனையிட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி வீட்டில் தீக்குளித்தார். தற்போது அவர் மீட்கப்பட்டு 90 % தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via