பிரபல நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

by Staff / 24-05-2023 01:31:39pm
பிரபல நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் உயிரிழந்தார். பிரபலமான நிகழ்ச்சியான 'சாராபாய் வெர்சஸ் சாராபாய்' மூலம் அவர் புகழ் பெற்றார். இந்தத் தொடரில் வைபவியுடன் பணியாற்றிய தயாரிப்பாளரும் நடிகருமான ஜேடி மஜேதியா அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். சபக், திமிர் போன்ற படங்களிலும் வைபவி நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைபவியின் உடல் இமாச்சலத்தில் இருந்து மும்பை கொண்டு வரப்படவுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

 

Tags :

Share via