ஆப்கனில் இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம்

by Editor / 04-09-2021 10:02:06am
ஆப்கனில் இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம்

ஆப்கனில் இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாக தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் கூறியது:

"ஆப்கனில் இன்று விமான சேவைகளை தொடங்க தலிபான்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளன."

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனை பாதுகாத்து வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினர்.

இதையடுத்து காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக நேற்று வெளியானது. இந்நிலையில், இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via