தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் கனமழை பொழியும்

by Editor / 16-10-2021 04:33:16pm
தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் கனமழை பொழியும்

தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் கனமழை பொழியும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும். அதேபோல் கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தொடர் மழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தருமபுரியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழையும், பொண்ணை அணைக்கட்டு, நாகர்கோவில், சோழவரம், ஜம்புகுட்டப்பட்டியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo