தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்

இன்று கிண்டியில், தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி தீரஜ்குமார் ,காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவால், கர்நாடக மாநில அலோக் மோகன், கேரளா மாநிலத்தில் சேக் தர்வேஸ் சாகோ, புதுச்சேரி மாநில ஷாலினி சிங், ஆந்திரா மாநில துவார திருமண அந்தமண் நிகோபர் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென் மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளான போதை பொருள்கள் ,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாநிலங்களுக்கு இடையேயான குற்ற செயல்கள் இணைய வழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றங்களில் இருந்து நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வது தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது.தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறையின் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதை பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம் என்றும் ஒன்று கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல். வங்கி கணக்கு முடக்கம். கடைகளுக்குச் சீல். கடுமையான அபராதம். கடும் சிறை தண்டனை பெற்றுத் தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாகக்ம் மூலமாக போதை பொருட்களை ஒழிப்பது, இரண்டாவது, போதை பொருள்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதை பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள். இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கின்றது. உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் போதை பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது .படித்து முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து அவர்கள் அடிமைகளாக கணினி சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் சைபர் ஸ்லாப்ரி பிரச்சனை தற்போது பெரிய அளவில் உருவெடுத்து இருக்கிறது. சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கிய நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இது போன்று வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும் .தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பின் முக்கிய கூறுகள் குறித்து விவாதிக்க இந்த மன்றம் என்றும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

Tags :