சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு

by Staff / 19-10-2024 04:05:06pm
சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஊசிமலை மட்டம் தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்சரா என்ற சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories