காவல்துறை சார்பில் பரிசு அறிவிப்பு

by Staff / 16-08-2024 01:51:23pm
காவல்துறை சார்பில் பரிசு அறிவிப்பு

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை 'ஜீரோ இஸ் குட்' மற்றும் 'ஜீரோ விபத்து தினம்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை தடுக்க பொதுமக்களிடம் மாற்றம் கொண்டு வரும் வகையில், சிறந்த ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் இம்மாதம் 24ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.

 

Tags :

Share via