நகைகக்டை உரிமையாளரை வெட்டிவிட்டு நகைகள் கொள்ளை
சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் ரமேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று (ஆக.16) கடைக்கு மாஸ்க் அணிந்து வந்த இருவர், நகைக்கடை உரிமையாளர் ரமேஷை கையில் வெட்டினர். தொடர்ந்து, அங்கிருந்து நகைகள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காயமடைந்த ரமேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :