ஜம்மு காஷ்மீர் டிஜிபியாக நளின் பிரபாத் நியமனம்

by Staff / 15-08-2024 02:22:51pm
ஜம்மு காஷ்மீர் டிஜிபியாக நளின் பிரபாத் நியமனம்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அந்த மாநில டிஜிபியாக நளின் பிரபாத்தை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது என்எஸ்ஜி டிஜியாக உள்ள அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. விரைவில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via