இஸ்கான் குறித்து மேனகா காந்தி குற்றச்சாட்டு

by Staff / 27-09-2023 12:23:12pm
இஸ்கான் குறித்து மேனகா காந்தி குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான மேனகா காந்தி சமீபத்தில் இஸ்கான் அமைப்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது நாட்டின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள இஸ்கான் கோசாலைக்கு சென்றபோது அங்கு ஒரு பசுவும் ஆரோக்கியமாக இல்லை என மேனகா காந்தி கவலை தெரிவித்தார். மாடுகளில் ஏன் கன்றுகள் இல்லை என்று கேட்டார். கோசாலை என்ற பெயரில் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை இஸ்கான் அமைப்பு மறுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories