சூடான் விவகாரம்.. பிரதமர் அறிவுறுத்தல்

by Staff / 21-04-2023 05:09:20pm
சூடான் விவகாரம்.. பிரதமர் அறிவுறுத்தல்

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் இந்திய தூதரக அதிகாரிகள், விமானப்படை மற்றும் கப்பல்படை தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சூடானில் இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், சூடானில் உள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துவர சாத்தியம் உள்ளதா எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories