டி.எஸ்.பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை?

by Editor / 18-07-2025 05:21:49pm
டி.எஸ்.பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை?

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனம் அவரிடம் இருந்து வாங்கப்பட்டதால், அவர் அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ வைரல் ஆனது. இச்சம்பவம் சர்ச்சையாகி, அவர் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று (ஜூலை 18) மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். மேலும், சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐஜிக்கு, தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via