திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 22-08-2024 11:13:02am
திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தின் பைலட், இந்த மிரட்டல் குறித்து ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு தகவல் அளித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 22) காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தலின் பேரில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via

More stories