எல்லா நாடுகளின் வளர்ச்சியும் முக்கியம் - பிரதமர் மோடி

by Staff / 22-08-2024 11:17:26am
எல்லா நாடுகளின் வளர்ச்சியும் முக்கியம் - பிரதமர் மோடி

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக போலந்து நாட்டுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரை நிகழ்த்திய அவர், இந்தியா அனைத்து உலக நாடுகளுடனும் நட்புடன் இருக்க விரும்புவதாகவும், அனைத்து நாடுகளின் வளர்ச்சியையும் இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்தார். போர் என்பது தேவையில்லாத ஒன்று. இதை அனைவரும் உணர வேண்டும். இந்தியா எப்போதும் அமைதியைத்தான் விரும்புகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via