டாஸ்மாக் வழக்கு - நீதிபதிகள் திடீர் விலகல்

by Editor / 25-03-2025 01:22:07pm
டாஸ்மாக் வழக்கு - நீதிபதிகள் திடீர் விலகல்

டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு இன்று காலை பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் திடீரென விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும். கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via