வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

by Staff / 24-06-2025 11:34:19pm
வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரிலுள்ள  ஆயத்த ஆடை தொழிச்சாலைகளில் பணியாற்றுவதற்காக  பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.இதில் காவல்துறை சோதனைகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை அடிக்கடி கைதுசெய்யப்பட்டு  வருகின்றனர்.

திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்த 1.)முகமது கொகோன்(45), 2.)முகமது கபீர் ஹோசன்(35) மற்றும் 3.)முகமது சாண்டோ பிரமணிக்(18) என்ற மூன்று நபர்களை சோதனை செய்ததில் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்த விபரம் தெரிய வந்தததை தொடர்ந்து நல்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

Tags :  வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Share via