விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை
சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். இவரது விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் வேலை பார்த்துவந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தனது குடும்பத்தினருடன் விஜய்யை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
விஜய் படப்பிடிப்புக்கு சென் றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் வீட்டில் இருந்து ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.
Tags :



















