"பால் கொள்முதல் விலை உயர்வு பற்றி பரிசீலனை"

by Staff / 19-06-2024 01:00:21pm

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பால் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்போம்" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo