கடலுக்கு குளிக்கச் சென்ற 5 வயது சிறுமி மற்றும் 25 வயது இளைஞர் கடலில் மூழ்கி பலி

by Admin / 19-06-2024 12:58:57pm
கடலுக்கு குளிக்கச் சென்ற 5 வயது சிறுமி மற்றும் 25 வயது இளைஞர் கடலில் மூழ்கி பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலுக்கு குளிக்கச் சென்ற 5 வயது சிறுமி மற்றும் 25 வயது இளைஞர் கடலில் மூழ்கி பலி : நேற்று சிறுமிக்கு காதணி விழா நடந்த நிலையில் நேர்ந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் - சோலையம்மாள் தம்பதியினரின் 2 மகள்களுக்கு நேற்றைய தினம் காதணி விழா விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் வேம்பார் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள கடலின் முகத்துவாரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலஅலையின் சீற்றம் அதிகமாக இருந்தகாரணத்தால் 5 வயது சிறுமி சாதனாகடலில் மூழ்கியுள்ளார், அப்போதுசிறுமியை காப்பாற்ற முயன்ற சிறுமியின் சித்தப்பா டேனி என்ற 25 வயது இளைஞரும் கடல் அலையில் சிக்கி மூழ்கியுள்ளார்..

இதுபற்றி தகவஅறிந்த கடலோர வேம்பார் காவல் படைபோலீசார் உடனடியாக அங்கு சென்று 5வயது சிறுமி சாதனா மற்றும் அவரதுசித்தப்பா டேனியை மீட்கும் முயற்சியில்ஈடுபட்டனர். ஆனால் கடலோரக்காவல்படை போலீசார் முதலில் டேனியின்உடலை இறந்த நிலையில் மீட்டனர்.தொடர்ந்து சிறுமி சாதனாவின்உடலையும் இறந்த நிலையில்கண்டெடுத்தனர்.

இதைத்தொடர்ந்தஇருவரின் உடல்களையும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வேம்பார் கடலோரக்காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடலுக்கு குளிக்கச் சென்ற 5 வயது சிறுமி மற்றும் 25 வயது இளைஞர் கடலில் மூழ்கி பலி
 

Tags :

Share via