உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல்-பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்.

by Admin / 07-10-2025 01:39:51am
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல்-பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்.

உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தாக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் இச்சம்பவம் கண்டிக்கத்தக்க செயல் என்றும் இந்த தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் ..இது குறித்து இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கபாயிடம் பேசினேன் என்றும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது .நமது சமூகத்தில் இது போன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை இது முற்றிலும் கண்டிக்கத்தக்க என்று கூறியுள்ளார்.. உச்ச மன்றத்தில் திங்கட்கிழமை காலை 11:35 மணி அளவில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்றார். இது இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரின் இந்த செயலுக்கு இனி அவர் எந்த நீதிமன்றத்திலும் வழக்காடுவது உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்தது...

 இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள்  எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல்-பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்.

Share via