ஜாகுவார் எக்ஸ்எஃப் காரில் ரூ 2 லட்சம் செலவழித்து தேசிய கொடி வரைந்த நபர்

by Editor / 15-08-2022 11:28:52pm
 ஜாகுவார் எக்ஸ்எஃப் காரில்  ரூ  2 லட்சம் செலவழித்து தேசிய கொடி வரைந்த நபர்

குஜராத்தைச் சேர்ந்த சித்தார்த் தோஷி என்ற இளைஞர் தனது 71.60 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான ஜாகுவார் எக்ஸ்எஃப் காருக்கு இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தால் பெயிண்ட் அடித்துள்ளார். 'ஹர் கர் திரங்கா' என்ற பிரச்சாரத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சித்தார்த் தோஷி தனது காருக்கு இந்திய தேசியக்கொடியின் வர்ணங்களை சுமார் 2 லட்சம் செலவு செய்து பெயிண்ட் அடித்து உள்ளார். அதுமட்டுமின்றி இந்த காரில் அவர் சூரத்தில் இருந்து டெல்லிக்கு இரண்டு நாட்களில் ஏறக்குறைய 1500 கிலோமீட்டர் பயணம் செய்து, செல்லும் வழியெல்லாம் தேசியக் கொடி மற்றும் 'ஹர் கர் திரங்கா' பற்றிய பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo