இந்தியாவில் டெஸ்லா ஷோரூம்.. ஜூலை 15ஆம் தேதி திறப்பு

டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கவுள்ளது. அதன்படி, வருகிற ஜூலை.15ஆம் தேதி இந்தியாவில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறக்கவுள்ளது. மும்பையின் குர்லா பகுதியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் அருகே 4000 சதுர அடியில் இந்த டெஸ்லா ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமுக்கு, மாத வாடகை மட்டும் சுமார் ரூ.35 லட்சம் என கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :