.“செய்தியாளர்களை நான் அடிக்க சொல்லவில்லை” - வைகோ

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மதிமுக கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை தாக்க கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் பேசிய வைகோ, “காலி சேர்களை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை வெளியே செல்லுமாறு தான் கூறினேன். அதற்குள்ளாக நமது தொண்டர்கள், ஆத்திரத்தில் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபட்டனர். நான் பத்திரைகையாளர்களை மதிப்பவன், பத்திரைகை சுதந்திரத்திற்காக நானும் சிறையில் இருந்தவன்” என்றார்.
Tags :