தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை.. சிக்கிய கடிதம்

சென்னையில் உள்ள பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் செய்த விவகாரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நவீன் பஞ்சலால் (37) என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர், நிறுவன அதிகாரிகளுக்கு மின் அஞ்சலில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :