உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.

by Editor / 11-11-2024 10:42:55am
 உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.

Share via

More stories