குடும்ப தகராறு காரணமாக மனைவியை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு காட்டு பகுதியில் வீசிய கணவர் கைது.
திருவண்ணாமலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட காட்டு பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை நகரம் பேகோபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோபி மற்றும் சரண்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இந்நிலையில் கோபிக்கும் சரண்யாவிற்கும் அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. சரண்யாவின் தாய் காவேரி வாரம் ஒரு முறை மகள் மற்றும் பேரக் குழந்தைகளை பார்க்க கோபியின் வீட்டிற்கு வந்து செல்கிறார். அவ்வாறு வரும்போது இருவருக்கும் சமாதானம் செய்துவிட்டு செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் மகளுக்கு தொலைபேசியில் அழைத்த தாய் காவேரி மகள் தொலைபேசியை எடுக்காததால் கடந்த 1ம் தேதி மகள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த தாய் மகள் குறித்து அவளது கணவர் கோபியிடம் கேட்டுள்ளார். அதற்கு கோபி உங்கள் மகள் வீட்டை விட்டு வெளியே சென்று இரண்டு நாட்கள் ஆகிறது என்று தெரிவித்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இது குறித்து தாய் காவேரி திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் கோபியின் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
பின்னர் கோபியை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து பின்னர் தனது மனைவியை வெட்டி கொலை செய்தது ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணை செய்ததில் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் ஆங்காங்கே வீசியதையும் ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து கோபி அளித்த வாக்குமூலத்தின் படி திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் கோபியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் உடல் பாகங்களை தேடும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறில் கணவனே மனைவியை கொலை செய்து எட்டு துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : குடும்ப தகராறு காரணமாக மனைவியை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு காட்டு பகுதியில் வீசிய கணவர் கைது.