வன்முறையில் ஈடுப்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் -டி.ஜி.பி.பேட்டி

by Editor / 17-07-2022 11:49:17am
 வன்முறையில் ஈடுப்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் -டி.ஜி.பி.பேட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த ஸ்ரீமதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவத்தில் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக கலவரம் ஏற்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.சைலேந்திரபாபு செய்தியாளர்கள் சந்திப்பு வழக்குபதிவு செய்யப்பட்டு முறையான விசாரணை செய்யபட்டுஉள்ளது.அப்படி இருக்கும் பொது வன்முறையில் ஈடுபட்டுள்ளதும்,வாகனங்களை தாக்குதல்,காவல்துறை வாகனங்களை தாக்குவது தவறானது, .விடியோபதிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது அதனைவைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.வன்முறையில் ஈடுப்பாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.காவலர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது.2எஸ்.பி.க்கள்.1.டி.ஐ.ஜி,350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்னும் 500 காவலர்கள் வந்துகொண்டு உள்ளனர்.கூடுதல் காவல் துறை இணை இயக்குனர் தாமரைக்கண்ணன்  தலைமையில் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு  உள்ளன,கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பாட்டுவருகின்றனர்.என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags : Those involved in violence will be arrested -DGP interview

Share via