பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. 2 பேரை தேடும் பணி தீவிரம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது என்று வதோதரா ஆட்சியர் அனில் தமேலியா தெரிவித்துள்ளார்.
பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில், 18 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :