15 வயது சிறுமி பலாத்காரம்.. மூன்று பேருக்கு தூக்கு

மேற்குவங்காள: ஜல்பைகுரி மாவட்டத்தில், 2020ஆம் ஆண்டு 15 வயது சிறுமி காணாமல் போனதாக போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் ரகுமான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை கடத்திச் சென்று, விடுதியில் வைத்து பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என உறுதியான நிலையில், நேற்று (ஜூலை 10) மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tags :