கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

by Editor / 17-02-2025 09:07:03am
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் - பழநி ரோடு மேல்பள்ளம் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி, மளமளவென பரவியதால், ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையாகின. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதிகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்தாண்டு காட்டுத் தீ ஏற்பட்டு பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் மாதக்கணக்கில் எரிந்தன.

 

Tags : கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

Share via