கர்நாடக சித்ரதுர்க மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து சென்ற சி பற்றி ஆம்னி பேருந்து லாரியுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை கர்நாடக சித்ரதுர்க மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து கோகர்ணாவிற்குச் சென்ற சீ-பர்ட் ஆம்னி பேருந்து ஒரு கொள்கலன் லாரியுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளானது .இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஹிரியூர் தாலுகா அருகே உள்ள ஜவனகொண்டஹள்ளி கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில், எதிர் திசையிலிருந்து வந்த கொள்கலன் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பைத் தாண்டி பேருந்து மீது மோதியது..பேருந்து டீசல் டேங்கில் லாரி மோதியதால் டீசல் கசிந்து தீ பற்றி சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியது.. பேருந்தில் பயணித்த 32 பயணிகளில் 9 பேர் சம்பவ இடத்திலே உயிர் கருகிய நிலையில் மீட்கப்பட்டனர். 20 பயணிகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tags :


















