திருச்சியில் மாவட்ட தொழில் அலுவலகம் மேலாளர் வீட்டில் சோதனை

திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகம் பொது மேலாளரின் வீட்டில் இருந்து ஆறு லட்ச ரூபாய் பணம் 50 சவரன் நகை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் சிக்கியது இதையடுத்து உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர் மேலும் அவருக்கு சொந்தமான இரு வங்கி லாக்கர்கள் சோதனையிட திட்டமிட்டுள்ளனர்.
Tags :