மூவாலூர் ராமமிர்த்தம்மைர் நினைவு திருமண உதவிதிட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்

by Admin / 20-03-2022 02:38:34pm
மூவாலூர் ராமமிர்த்தம்மைர் நினைவு திருமண உதவிதிட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..அதில் அவர் கூறியிருப்பது தமிழ் நாட்டில்  6-ம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்து பட்ட மற்றும் பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும்,படிப்பை முடிக்கும்  மாதம் ரூ.1.000 நிதியுதவி வழங்கப்படும் என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு,ஏழைப்பெண்களுக்கு  உள்ளிட்ட திருமண திருமண உதவி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது.மாணவிகளுக்கு நிதிவழங்குவதற்காக,தமிழகத்தில்  செயல்படுத்தப்பட்டு வந்த   ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித்திட்டம்,மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி  என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதாவது திருமண உதவித்திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.இனி யாருக்கும் இத்திட்டத்தின் படி தாலியும் நிதியும் வழங்கப்படாது.இது கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.ஏழைப்பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது அரசுக்கு எந்தவகையிலும் அழகு  சேர்க்காது.மூவாலூர் ராமமிர்த்தம்மைர் நினைவு திருமண உதவிதிட்டம் தொடர்ந்து   செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்என்று கூறியுள்ளார்

 

Tags :

Share via