வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு

by Staff / 12-02-2024 04:15:30pm
 வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு  மீட்பு

 சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல்  பணிக்கு பிறகு வெற்றியின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவாி.04-ம் தேதி நடந்த விபத்தில் வெற்றி துரைசாமி உள்படமூன்று பேர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி. சட்லஜ் நதியில் விழுந்தது. சினிமா படப்பிடிப்பிற்க்காக லோகேஷன் தேடிச் செல்லும் போது இந்த விபத்து நடந்தது.குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via