மைசூர் -செங்கோட்டை -மைசூர் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்..

by Editor / 05-09-2024 10:24:56pm
மைசூர் -செங்கோட்டை -மைசூர் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்..

மைசூரில் இருந்து செங்கோட்டைக்கு விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் 4 ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு துவங்கியது. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த ரயில் 5ஆம் தேதி 4.50மணியளவில் செங்கோட்டையை இன்று வந்து அடைந்தது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையிலிருந்து  5ஆம்  தேதி வியாழக்கிழமை 7:45 மணிக்கு இந்த ரயில் மைசூருக்கு புறப்பட்டது. தொடர்ச்சியாக இந்த ரயிலை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கதலைவர் முரளி,செயலாளர் கிருஷ்ணன்,பொருளாளர் சுந்தரம்,லயன்ஸ் கிளப் சங்கரபாண்டியன்,அனந்தபத்மநாபன்,மற்றும் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும்,வர்த்தக சங்கத்தலைவருமான ரஹீம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி ரயில் போக்குவரத்தை துவங்கினர்.ரயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். மேலும் வரும் ஏழாம் தேதி சனிக்கிழமை மீண்டும் மைசூரில் இருந்து இந்த ரயில் செங்கோட்டைக்கு 8ஆம் தேதி வந்தடைகிறது. செங்கோட்டையில் இருந்து 7 45 மணிக்கு மாலையில் புறப்படும் ரயில் மறுநாள் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது. இந்த ரயிலில்  ரயிலின் கலவை 2 ஏசி 2 அடுக்கு, , 2 ஏசி 3 அடுக்கு, 6 ​​ஸ்லீப்பர் வகுப்பு, 6 பொது இரண்டாம் வகுப்பு மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள்.
இணைக்கப்பட்டுள்ளன. தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பெங்களூர், கே எஸ் ஆர் ரயில் நிலையம், கெங்கேரி, ராமநகரம், மத்தூர், மாண்டியா, எலியூர், வழியாக மைசூர் சென்று அடைகிறது.
 

 

Tags : மைசூர் -செங்கோட்டை -மைசூர் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்..

Share via