ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி

by Staff / 03-06-2023 11:34:46am
ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 35 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் தலைமையிலான குழு ஒடிசா விரைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கண்காணிப்பு மையத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளின் விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், இன்று தமிழ்நாட்டில் நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo